செய்திகள்

மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டிய தலைமை ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

Published On 2019-06-19 11:06 GMT   |   Update On 2019-06-19 11:06 GMT
கோவை அருகே மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டிய பெண் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
கணபதி:

கோவை சரவணம் பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் 3 பேரை பள்ளியின் தலைமை ஆசிரியை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பிரம்பால் அடித்ததில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி பெற்றோர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.

இது குறித்து பெற்றோர் கூறும்போது, இந்த ஆரம்ப்பள்ளியின் தலைமை ஆசிரியை இதேபோல தொடர்ந்து செயல்படுகிறார்.இதன் காரணமாக பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்காமல் சரவணம்பட்டியில் உள்ள பள்ளியில் சென்று சேர்த்துள்ளனர்.மேலும் பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மாநகராட்சி பள்ளியில் மாணவிகளை அடித்ததால் பெற்றோர்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News