செய்திகள்
வெள்ளலூரில் உள்ள கோவில்களை இந்து அறநிலையத்துறை நிர்வகிக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்டிருந்த பெண்கள்.

மேலூர் அருகே கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்க கடும் எதிர்ப்பு

Published On 2019-06-19 09:44 GMT   |   Update On 2019-06-19 09:44 GMT
கோவில்களை அரசுடைமயாக்கும் முயற்சியை கண்டித்து 60 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மனு கொடுத்தனர்.
மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஏழை காத்த அம்மன் கோவில், வல்லடிகாரர் கோவில், மந்தை கருப்புசாமி கோவில்கள் உள்ளன.

வெள்ளலூரை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வ கோவிலாக விளங்கும் இங்கு ஆண்டுதோறும் விமரிசையாக திருவிழா நடைபெறும். அப்போது வெள்ளலூர் மற்றும் 60 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் விரதமிருப்பார்கள். ஒவ்வொரு கோவில் திருவிழாவிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

சமீப காலமாக இந்த கோவில்களை நிர்வகிப்பதில் சிறிய பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒரு சிலர் அரசின் இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே மேற்கண்ட 3 கோவில்களையும் இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. இதுகிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாரம்பரியமாக உள்ள இந்த கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக்கூடாது. தற்போது உள்ள நடைமுறையே இருக்க வேண்டும் எனக்கூறி இன்று வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 60 கிராமங்களில் கடைகளை அடைத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இன்று காலை வெள்ளலூர் கருங்கல்மந்தை முன்பு 60 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் கோவில்களை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தக்கூடாது என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News