செய்திகள்
பிடிபட்ட நாகப்பாம்பு.

போச்சம்பள்ளி அருகே பிரிட்ஜில் இருந்த நாகப்பாம்பு

Published On 2019-06-15 06:36 GMT   |   Update On 2019-06-15 06:36 GMT
போச்சம்பள்ளி அருகே பிரிட்ஜின் பின்புறத்தில் நாகப்பாம்பு பதுங்கி இருந்த சம்பவத்தை அறிந்த அந்த பகுதியினர் பெரும் பீதியுடன் உள்ளனர்.
போச்சம்பள்ளி:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று வரையும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏர்கூலர் மற்றும் ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் போன்ற மின்சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இத்தகைய குளிரூட்டக்கூடிய மின்சாதனங்களில் பாம்பு புகுந்து வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 35). ராணுவ வீரரான இவர் தனது வீட்டில் பிரிட்ஜ் வைத்து பயன்படுத்தி வந்தார். இன்று காலை இவரது பிரிட்ஜின் பின்புறத்தில் புஸ் புஸ் என சத்தம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அசோக்குமார் பிரிட்ஜின் பின்புறத்தில் பார்த்தபோது, அங்கு 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அசோக்குமார் அவரது நண்பர் நாராயணசாமி என்பவருக்கு தகவல் தெரிவித்து அழைத்து வந்தார்.

பின்னர் அவர், பிரிட்ஜின் பின்புறத்தில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்தார். இதனை அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் உயிருடன் விட்டனர். பிரிட்ஜில் பாம்பு இருந்த சம்பவத்தை கேட்ட அந்த பகுதியினர் பெரும் பீதியுடன் உள்ளனர்.



Tags:    

Similar News