ENGvsIND 4th Test ஜெய்ஸ்வால் அரைசதம்: கே.எல். ராகுல் 46 ரன்னில் அவுட்..!
- ஜெய்ஸ்வால் 96 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
- கே.எல். ராகுல் 98 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார்.
முதல் ஒருமணி நேரம் (Drinks) வரை ஜெய்ஸ்வால் சற்று தடுமாறி விளையாடினார். ஆனால் கே.எல். ராகுல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Drinks இடைவேளைக்குப் பின் ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறந்த வகையில் ஸ்விங் செய்தனர். என்றபோதிலும் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இதனால் இருவரும் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 26 ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்தது, அப்போது கே.எல். ராகுல் 40 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் வீசிய ஆட்டம் தொடங்கிய 4ஆவது ஓவரின் (இன்னிங்சின் 30ஆவது ஓவர்) கடைசி பந்தில் கே.எல். ராகுல் 46 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 94 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாட மறுமுனையில் 35ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து 96 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.