விளையாட்டு
தோனியுடன் ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் ரவிந்திர ஜடேஜா மோதல்?- இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியதால் பரபரப்பு

Update: 2022-05-12 06:36 GMT
காயம் காரணமாக ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாக அணி நிர்வாகம் அறிவித்தது.
மும்பை:

நடைபெற்று வரும் ஐபிஎல் 15-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவிந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின் தொடர் தோல்வி அடைந்ததால், கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் கேப்டன் பதவி மீண்டும் தோனிக்கே தரப்பட்டது.

தற்போது காயம் காரணமாக ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாகவும் அணி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமி பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஜடேஜா அணியில் இருந்து விலகியது காயம் காரணமாக அல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏற்பட்ட மோதலால் தான் என பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

தொடர் தோல்வி காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து மீண்டும் தோனிக்கு கொடுத்திருக்கலாம், ஜடேஜாவாக விருப்பப்பட்டு கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் பலர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News