விளையாட்டு
கிரேக் சேப்பல் , எம்.எஸ்.தோனி

மிக நுட்பமான கிரிக்கெட் வீரர் தோனி - முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கருத்து

Published On 2022-01-26 18:13 GMT   |   Update On 2022-01-26 18:13 GMT
அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதன் மூலம் முடிவெடுக்கும் வியூக திறன்களை தோனி வளர்த்துக் கொண்டார் என்று சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005 முதல் 2007ம் ஆண்டுவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்ரேலியாவின் கிரேக் சேப்பல் பணியாற்றினார். அப்போது தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து தனியார் செய்தி தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.  

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து நுட்பம் தெரிந்த வீரர்கள் (தோனி) ஒருவர். அவரது முடிவெடுக்கும் திறன், மற்ற சமகால வீரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தி காட்டியது.  இந்திய துணைக் கண்டத்தில் இன்னும் பல நகரங்கள் பயிற்சி வசதிகள் இல்லாதவை. அங்குள்ள இளைஞர்கள் முறையான பயிற்சி இல்லாமல் தெருக்களிலும் காலி நிலங்களிலும் விளையாடுகிறார்கள்.  தற்போதைய நட்சத்திரங்கள் பலர் இங்குதான் விளையாட்டைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரிலிருந்து வந்த தோனி. 

இந்தியாவில் நான் பணிபுரிந்த, திறமையை வளர்த்துக் கொண்டு தமது பாணியில் விளையாடக் கற்றுக்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன்களில் தோனியும் ஒருவர். தனது வளர்ச்சியின் தொடக்கத்தில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதன்  மூலம், தோனி தனது முடிவெடுக்கும் மற்றும் வியூகத் திறன்களை வளர்த்துக்கொண்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News