விளையாட்டு
ஐபிஎல்

கொரோனா பரவல் - மும்பையில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டம்

Update: 2022-01-10 07:37 GMT
ஐபிஎல் போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மும்பை:

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13-ந் தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது.

இதற்கிடையே நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டிகளை ஒரே இடத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு கருதி 2-வது திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்படி அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களையும் மராட்டிய மாநிலம் மும்பையில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவீன் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 3 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News