செய்திகள்
சஞ்சு சாம்சன், ஆதர்ஷ்

கேரளாவின் இளம் கால்பந்து வீரருக்கு உதவிக்கரம் நீட்டிய சஞ்சு சாம்சன்

Published On 2021-11-14 12:03 GMT   |   Update On 2021-11-14 12:03 GMT
கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்கு தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள்.
கேரளாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஆதர்ஷ். இவருக்கு 5-வது டிவிஷன் பிரிவில் கால்பந்துப் பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த ஒரு மாதப் பயிற்சியில் அவரால் 5 ஆட்டங்களில் விளையாட முடியும். அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டால் ஸ்பெயின் கிளப்புகளில் தேர்வாகவும் வாய்ப்புண்டு. 

ஆனால் ஸ்பெயினுக்குச் சென்று பயிற்சி எடுக்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை. எனவே, அவர் கேரள அமைச்சர் சாஜி செரியனிடம் உதவி கோரினார். இதனைத் தொடர்ந்து, ஆதர்ஷின் நிலைமை மற்றவர்களும் தெரியவந்தது. பலர் உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். 

கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்குத் தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள். மேலும்,  தனியார் கிளப் ஒன்று ரூ. 50,000 அளித்த நிலையில் கேரள அமைச்சர் சாஜி செரியனும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆதர்ஷுக்கு நிதியுதவி செய்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் தன் பங்குக்கு ஆதர்ஷுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். ஆதர்ஷ் ஸ்பெயின் செல்வதற்கான விமான டிக்கெட் செலவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதர்ஷ் விரைவில் மேட்ரிட் சென்று பயிற்சியில் பங்கேற்க வாழ்த்து தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.
Tags:    

Similar News