செய்திகள்
யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் ருத்ரதாண்டவம் ஆடிய நாள் இன்று... மறக்க முடியுமா?

Published On 2021-09-19 10:57 GMT   |   Update On 2021-09-19 10:57 GMT
யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அபார சாதனைப் படைத்த நாள் இன்று.
இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றது. இந்த இரண்டு கோப்பைகளையும் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங். தனது அபார பேட்டிங்காலும், சுழற்பந்து பந்து வீச்சாலும், பீல்டிங்காலும் அசத்தியவர்.

ஐ.சி.சி. அறிமுகம் செய்த முதல் டி20 உலகக் கோப்பை தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான இளம் இந்திய அணி களம் இறங்கியது.  அக்டோபர் 19-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின.

தற்போது இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஸ்டூவர்ட் பிராட், அப்போது இளம் வீரராக இருந்தார்.

அவர் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு திசைக்கு அனுப்பினார். அதோடு அல்லாமல் 12 பந்தில் அரைசதம் அடித்து, மிக வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை நினைவு கூறும் வகையில், இன்றைய தினம் ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் சிக்சர்கள் விளாசிய வீடியோவை பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News