செய்திகள்
விக்கெட் வீழ்த்திய அலெக்சாண்டர்

டிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2021-08-15 17:37 GMT   |   Update On 2021-08-15 17:39 GMT
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் திருச்சி அணிக்கு எதிராக சேப்பாக் அணியின் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி 90 ரன்கள் விளாசினார்.
சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி 58 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
கவுசிக் காந்தி (26), ராதாகிருஷ்ணன் (3), சசிதேவ் (12), ஆர். சதீஷ் (11) என ஆட்டமிழந்தனர்.

திருச்சி அணி சார்பில் ராஹில், பொய்யாமொழி தலா 2 விக்கெட்டும், அந்தோனி தாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின், 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி 16 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

நிதிஷ் ராஜகோபால் 26 ரன்னும், சந்தோஷ் ஷிவ் 16 ரன்னும், அந்தோனி தாஸ் 13 ரன்னும், ஆதித்ய கணேஷ் 10 ரன்னும், அட்னன் கான் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சரவணகுமார் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மதிவாணன் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் மதிவாணன் 13 ரன்னில் அவுட்டானார். சரவணகுமார் 45 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், திருச்சி அணி 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

சேப்பாக் அணி சார்பில் சோனு யாதவ் 2 விக்கெட், ராஜகோபால் சதீஷ், சாய் கிஷோர், அருண், அலெக்சாண்டர், ஹரிஷ்குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Tags:    

Similar News