செய்திகள்
மெஸ்சி

பி.எஸ்.ஜி. உடன் இரண்டு வருட ஒப்பந்தம்: கையெழுத்திட்டார் மெஸ்சி

Published On 2021-08-11 09:21 GMT   |   Update On 2021-08-11 09:21 GMT
அர்ஜென்டினாவின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி, பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய நிலையில் பி.எஸ்.ஜி. அணியில் இணைந்துள்ளார்.
கால்பந்து கிரிக்கெட்டில் வல்லவராக திகழ்பவர் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி. இவர் கடந்த 21 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சினை காரணமாக பார்சிலோனா கிளப் மெஸ்சி உடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாமல் போனது.

இதனால் மெஸ்சி கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் என பார்சிலோனா அணி கடந்த வாரம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து மெஸ்சி அதிகாரப்பூர்வமாக பார்சிலோனா அணியில் இருந்து விலகினார்.

அவரை ஒப்பந்தம் செய்ய ஏராளமான கிளப்புகள் விரும்பின. பிரான்ஸ் நாட்டின் பி.எஸ்.ஜி. கிளப் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டியது. அதற்கான ஒப்பந்தத்தை தயார் செய்து மெஸ்சிக்கு அனுப்பியது.



மெஸ்சி அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பாரிஸ் சென்று பி.எஸ்.ஜி. அணியின் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டார். அதன்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்மூலம் மெஸ்சி அடுத்த இரண்டு ஆண்டுகள் பி.எஸ்.ஜி. அணியில் இடம் பிடித்து விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மெஸ்சி களம் இறங்குவார் எனத் தெரிகிறது.
Tags:    

Similar News