செய்திகள்
வெற்றியை கொண்டாடும் இங்கிலாந்து வீரர்கள்

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Published On 2021-07-08 09:49 GMT   |   Update On 2021-07-08 09:49 GMT
இங்கிலாந்து கால்பந்து அணி 55 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
லண்டன்:

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று லண்டனில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இந்நிலையில், இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து-டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன. 

இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் பெனால்டி கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் தடுக்க முயன்றபோது, திரும்பி வந்த பந்தை இங்கிலாந்தின் ஹாரி கேன் கோலாக மாற்றினார். எனவே, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 55 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப்போட்டி 12ம் தேதி நடைபெறுகிறது. இதில், இத்தாலி, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 
Tags:    

Similar News