செய்திகள்
ரபேல் நடால்

விம்பிள்டன், டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரபேல் நடால் விலகல்

Published On 2021-06-17 13:26 GMT   |   Update On 2021-06-17 13:26 GMT
பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார் ரபேல் நடால்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரபேல் நடால். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடாலை செம்மண் தரையில் எளிதாக யாரும் வீழ்த்திவிட முடியாது.

ஆனால் கடந்த வாரத்துடன் முடிவடைந்த பிரெஞ்ச் ஓபன் தொடரின் அரையிறுதியில் நடாலை ஜோகோவிச் வீழ்த்தினார். இதனால் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

பிரெஞ்ச் ஓபனை தொடர்ந்து விம்பிள்டன் ஓபன் வருகிற 28-ந்தேதி தொடங்கு ஜூலை 11-ந்தேதி வரை நடக்கிற. அதன்பின் இரண்டு வாரம் இடைவெளியில் ஜூலை 23-ந்தேததி டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார். ‘‘பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் ஓபன் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது. செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக தனது உடலை புல்தரைக்கு ஏற்றவாறு மாற்றுவது எளிதானது அல்ல’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News