செய்திகள்
ஷாகிப் அல் ஹசன்

வங்காளதேச கிரிக்கெட் போர்டின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் ஷாகிப் அல் ஹசன்

Published On 2020-12-04 17:08 GMT   |   Update On 2020-12-04 17:08 GMT
சூதாட்டம் தொடர்பான தகவலை மறைத்த விவகாரத்தில் ஓராண்டு தடைக்காலம் பெற்ற ஷாகிப் அல் ஹசன் மீண்டும் வங்காள தேச கிரிக்கெட் போர்டின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இணைய இருக்கிறார்.
வங்காளதேச அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டத்தரர் இவரை அணுகிய தகவலை ஊழல் தடுப்புக்குழுவிற்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இதனால் ஐசிசி ஓராண்டு தடைவிதித்தது.

கடந்த ஓராண்டாக கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த ஷாகிப் அல் ஹசன் தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் விளையாட உள்ளார். விரைவில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் செல்கிறது. இந்தத் தொடரில் இடம் பெறுகிறார்.

தடைவிதித்தபோது வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷாகிப் அல் ஹசனை நீக்கியிருந்தது. தற்போது மீண்டும் சேர்க்க இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை வைத்துதான் வீரர்கள் பெயர் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும்.

இந்த நடைமுறை ஷாகிப் அல் ஹசனுக்கு பொருந்தாது என்று வங்காளதேச கிரிக்கெட் போர்டின் செயல்பாட்டு சேர்மன் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News