செய்திகள்
ஐபிஎல் 2020

ஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு

Published On 2020-10-31 19:32 GMT   |   Update On 2020-10-31 19:32 GMT
ஐபிஎல் போட்டியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த வருடம் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டி நவம்பா் 10 அன்று நிறைவு பெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியின் தொலைக்காட்சி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

21 சேனல்களில் முதல் 41 போட்டிகளுக்கு 700 கோடி பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். கடந்த வருடம் 24 சேனல்களில் முதல் 44 போட்டிகளுக்கு 550 கோடி பார்வையாளர்கள் கிடைத்தனர். இதையடுத்து இந்த வருட ஐ.பி.எல். போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டங்கள் நிறைவுப் பகுதியை அடைந்துள்ளன. நவம்பர் 3 வரை நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளே ஆஃபுக்குத் தகுதி பெற்றுள்ளது. நவம்பர் 5 முதல் பிளே ஆஃப் சுற்று தொடங்குகிறது. இறுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது.
Tags:    

Similar News