செய்திகள்
ரபடா, டி வில்லியர்ஸ், டி காக்

3TC கிரிக்கெட் போட்டி: ஜூலை 18-ல் நடத்துகிறது தென்ஆப்பிரிக்கா

Published On 2020-07-01 13:54 GMT   |   Update On 2020-07-01 13:54 GMT
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டும் வகையில் மூன்று அணிகளுக்கு இடையிலான காட்சி கிரிக்கெட் போட்டியை தென்ஆப்பிரிக்கா நடத்துகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு ஒவ்வொரு நாடுகளும் மீண்டும் கிரக்கெட் போட்டிகளை தொடங்க தயாராகி வருகின்றன. முதற்கட்டமாக இங்கிலாநது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகி்ஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்று அணிகள் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி முடிவு செய்தது. ,இதற்கு 3TC போாட்டி எனப் பெயரிட்டிருந்தது. முதலில் ஜூன் 27-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. தென்ஆப்பிரிக்க அரசின் அனுமதி கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 102-வது பிறந்த நாள் வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்று இந்த போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

மூன்று அணிகளுக்கும் ஏபி டி வில்லியர்ஸ், குயின்டன் டி காக், ரபடா ஆகியோர் கேப்டன்களாக இருப்பார்கள். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு போட்டியும் 12 ஓவர் கொண்டதாக இருக்கும்.

ஒரு அணியில் 8 பேர் பேட்டிங் செய்யலாம். 7 விக்கெட் வீழந்தாலும் 8-வது நபர் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். இரண்டு, நான்கு, சிக்சர்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒரே நாளில் இந்த போட்டிகள் நடைபெறும். மொத்தம் 36 ஓவர்கள் ஆகும்.
Tags:    

Similar News