செய்திகள்
மிக்கி ஆர்தர், முகமது அமிர்

முகமது அமிருக்கு பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: மிக்கி ஆர்தர் சொல்கிறார்

Published On 2020-04-21 11:39 GMT   |   Update On 2020-04-21 11:39 GMT
இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிருக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மிக்கி ஆர்தர் சொல்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். ஐசிசி-யின் சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

கடந்த வருடம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முகமது அமிர் அவரது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால், முகமது அமிர் அவரது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முகமது அமிரை ஓரங்கட்ட ஆரம்பித்தது.

மிஸ்பா-உல்-ஹக் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் பதவி ஏற்றபின் முகமது அமிருக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்கவில்லை.

டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் - நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் முகமது அமிருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முகமது அமிர் இல்லாமல் பாகிஸ்தான் செல்வதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் அவரை அணியில் இருந்து தூக்கினால், உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை நீங்கள் தியாகம் செய்ய வேண்டிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

அமிர் டாப்-கிளாஸ் பந்து வீச்சாளர், மேட்ச் வின்னர். அவரது பந்து வீச்சை நாம் விரும்பி பார்ப்பேன். ஆனால், ஒயிட்-பால் கிரிக்கெட்டின் கேரியரை நீட்டிப்பதற்காகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News