செய்திகள்
கே.டி. இர்பான்

டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைப்பால் அதிகமான நேரம் கிடைத்துள்ளது: இந்திய தடகள வீரர் சொல்கிறார்

Published On 2020-04-10 12:04 GMT   |   Update On 2020-04-10 12:04 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தயாராகுவதற்கு கூடுதலாக நேரம் கிடைத்துள்ளது என இந்திய தடகள வீரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பிற்கு சில வீரர்கள் வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்து வந்தாலும், சில வீரர்கள் வீராங்கனைகள் வரவேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய நடை ஓட்டப்பந்தயத்தில் (Race Walking) 20 கிலோ மீட்டர் பிரிவில் நான்காவது இடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றவர் இந்திய வீரர் கே.டி. இர்பான்.

போட்டி தள்ளிவைப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக கூடுதலான நேரத்தை கொடுத்துள்ளது என்று கே.டி. இர்பான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.டி. இர்பான் கூறுகையில் ‘‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது நல்லதுதான். அதிக அளவில் பயிற்சி மேற்கொண்டு பதக்கத்தை வெல்லக்கூடிய அளவிற்கு நெருங்க முடியும். நடஓட்டப்பந்தயம் டெக்னிக்கல் போட்டி. ஆகவே இந்த நேரத்தை எடுத்துக் கொண்டு அதிக அளவில் கவனம் செலுத்துவேன். இந்த நேரம் அடுத்த வருடம் போட்டிக்கு மிகச் சிறப்பாக தயாராக உதவி செய்யும்’’என்றார்.
Tags:    

Similar News