செய்திகள்
மார்கிராம்

பயிற்சி ஆட்டத்தில் மார்கிராம் சதம், பவுமா அரைசதம்: டு பிளிசிஸ் ஏமாற்றம்

Published On 2019-09-27 13:27 GMT   |   Update On 2019-09-27 13:27 GMT
இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் மார்கிராம் சதமும், பவுமா அரைசதமும் அடித்த நிலையில், டு பிளிசிஸ் ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா - இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையால் ஆட்டம் நடைபெறவில்லை.

இன்று ஆட்டம் தொடங்கியது. இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு ரோகித் சர்மாவும், தென்ஆப்பிரிக்கா அணிக்கு டு பிளிசிஸ் கேப்டனாகவும் தலைமை ஏற்றனர். டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணியின் மார்கிராம், டீன் எல்கர் ஆகியொர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். எல்கர் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி ப்ரூயின் 6 ரன்னிலும், ஹம்சா 22 ரன்னிலும் வெளியேறினர்.

4-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்கிராம் சதம் அடித்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். அவர் 118 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார்.

பவுமா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவுற்றது. பவுமா 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Tags:    

Similar News