செய்திகள்
எம்எஸ் டோனி

எம்எஸ் டோனி அணியில் இடம் பெறாததற்கு காரணம் இதுதானா?

Published On 2019-09-26 11:41 GMT   |   Update On 2019-09-26 11:41 GMT
எம்எஸ் டோனிக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால்தான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடர்களில் இடம் பெறவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

உலகக்கோப்பை தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்ஆப்பரிக்கா தொடர்களில் விளையாடவில்லை. ராணுவத்தில் சேர்வதற்காக இரண்டு மாதங்கள் விடுமுறை கேட்டுள்ளார் என்ற கூறப்பட்டது.

இந்நிலையில் காயத்தால்தான் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்எஸ் டோனிக்கு ஏற்கனவே முதுகு வலி உண்டு. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, ‘‘எனது காயம் மோசமானதுதான். ஆனால், அது எப்படிபட்டது என்று தெரியாது’’ என்று கூறியிருந்தார்.



உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாடியதால் முகுது வலி பிரச்சனை வீரியம் அடைந்ததாம். மேலும், மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டதாம். காயங்கள் முற்றிலுமாக குணமடைய நவம்பர் மாதம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால்தான் டோனி ஓய்வில் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இதனால் எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி, டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை விளையாட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News