செய்திகள்
கோப்பு படம்

புரோ கபடி ‘லீக்’ போட்டி - டெல்லி அணி மீண்டும் முதல் இடத்தை பிடிக்குமா? பாட்னாவுடன் இன்று மோதல்

Published On 2019-09-26 06:46 GMT   |   Update On 2019-09-26 06:46 GMT
புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி பாட்னாவை மீண்டும் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.
ஜெய்ப்பூர்:

7-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 40-39 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்கால் அணி 73 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணி 72 புள்ளியுடன் 2-வது இடத்துக்கு பின் தங்கியது.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர்அணி 43-34 என்ற கணக்கில் புனேயை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 108-வது ‘லீக்‘ ஆட்டத்தில் தபாங் டெல்லி- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி பாட்னாவை மீண்டும் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி எற்கனவே பாட்னாவை 38-35 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டெல்லி அணி 77 புள்ளிகள் பெறும். ஆட்டம் டை ஆனாலும் 75 புள்ளியுடன் மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும்.

பாட்னா அணி டெல்லிக்கு பதிலடி கொடுத்து 7-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள் பர்தீப்நர்வால் (பாட்னா)- நவீன்குமார் ‘(டெல்லி) நேருக்கு நேர் மோதுகிறார்கள். பர்தீப் நர்வால் 18 ஆட்டத்தில் 224 ரைடு புள்ளியும் நவீன்குமார் 211 ரைடு புள்ளியும் (17 ஆட்டம்) பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News