செய்திகள்
சர்பராஸ் அகமது, பாபர் ஆசம்

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் ஒரு பகுதியாக இருங்கள்: ரசிகர்களுக்கு சர்பராஸ் அகமது அழைப்பு

Published On 2019-09-25 15:45 GMT   |   Update On 2019-09-25 15:45 GMT
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண மிகப்பெரிய அளவில் திரண்டு வாருங்கள் என்ற பாகிஸ்தான் கேப்டன் ரசிர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் கடந்த 2009-ம் ஆண்டுகளுக்குப்பின் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. எந்த அணி பாகிஸ்தான் சென்றபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினோர்களோ, அதே அணி தற்போது துணிச்சலுடன் பாகிஸ்தான் சென்றுள்ளது.

இது பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரள வேண்டும் என்று கேப்டன் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘ஜனவரி 2009-க்குப் பிறகு கராச்சி மைதானத்தில் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும்போது, வெள்ளிக்கிழமை வரலாறு படைக்க இருக்கிறது.

உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வரலாற்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில், அவர்களுடைய சந்ததியினரிடம் தேசிய மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது, நாங்கள் நேரில் சென்று பார்த்தோம் என சொல்ல முடியும்’’ என்றார்.

என்னால் வெள்ளிக்கிழமைக்காக காத்திருக்க முடியாது. ஏனென்றால் நினைவு கூரத்தக்க விழாவாக இருக்கும். நான் மைதானத்தில் விளையாடுவதற்காக வெளியே வரும்போது, ஒட்டுமொத்த வீடும் பின்னால் நிற்கும் என நம்புகிறேன். எனக்கு மட்டுமல்ல, இரண்டு அணிகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்’’ என்றார்.

பாகிஸ்தான் துணைக்கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில் ‘‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு என்னால் நன்று கூற இயலாது. பாகிஸ்தான் துணைக் கேப்டனாக களம் இறங்க இருப்பது என்னுடைய மிகப்பெரிய நாளாக இருக்கும். ஒட்டுமொத்த நாடும், மைதானத்திற்கு வரும் ரசிகர்களும் ஞாபகத்தில் இருக்கும் நாளாக அமையும் என நம்புகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News