செய்திகள்
ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி ஹென்ரிக்ஸ்

3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

Published On 2019-09-22 15:17 GMT   |   Update On 2019-09-22 15:17 GMT
பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானததில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். தவான் அதிரடியாக விளையாடினாலும், விராட் கோலி ரன்கள் சேர்க்க திணறினார். தவான் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் குவித்தார். தவான் ஆட்டமிழக்கும் போது இந்தியா 7.2 ஓவரில் 63 ரன்கள் எடுத்திருந்தது.

தவான் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 15 பந்தில் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்தியாவின் ஸ்கோர் அப்படியே தவழ ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 ரன்னிலும், குருணால் பாண்டியா 4 ரன்னிலும் வெளியேறினார்.



ஜடேஜா 17 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 18 பந்தில்  14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும் போர்ச்சுன் மற்றும் ஹென்ரிக்ஸ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News