செய்திகள்
கரோலினா மரின்

சீனா ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார்

Published On 2019-09-22 09:57 GMT   |   Update On 2019-09-22 09:57 GMT
சீனா ஓபன் பேட்மிண்டனில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சீன-தைபே வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனா ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்நாட்டைச் சேர்ந்த கரோலினா மரின், சீன-தைபேயைச் சேர்ந்த தாய் ஜு யிங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை தாய் ஜு யிங் 14-21 என எளிதில் வென்றார். 2-வது சுற்றில் சுதாரித்துக் கொண்ட கரோலினா 2-வது மற்றும் 3-வது சுற்றில் அபாரமாக விளையாடினார். தாய் ஜு ஜிங் நெருக்கடி கொடுத்தாலும் கரோலினா மரின் 2-வது செட்டை 21-17 எனவும், 3-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

8 மாதங்களாக காயத்தால் விளையாடாமல் இருந்த, கரோலினா மரினுக்கு காயத்தில் இருந்து மீண்டபிறகு 2-வது தொடர் இதுவாகும். 2-வது தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Tags:    

Similar News