செய்திகள்
தீபக் புனியா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி

Published On 2019-09-21 13:30 GMT   |   Update On 2019-09-21 13:30 GMT
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்தப் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய வீரர்கள் தீபக் புனியா மற்றும் ராகுல் அவேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:

கஜகஸ்தானில் உள்ள நுர்-சுல்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த தீபக் புனியாவும் கொலம்பியா வீரர் காரலோசும் மோதினர். இதில் தீபக் புனியா 7-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று ஆஇயிறுதிக்கு முன்னேறினார். 

உலக மல்யுத்த அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி பெற்றுள்ளார்.


 
இதேபோல், 61 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முன்னாள் ஆசிய சாம்பியனான ரசூல் கலியேவை 10 - 7 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் ராகுல் அவேர் வென்றார். இதன்மூலம் அரை இறுதிக்கு முனேற்றம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, உலக மல்யுத்தப் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய வீரர்கள் தீபக் புனியா, ராகுல் அவேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News