செய்திகள்
ரன் குவிப்பில் ஈடுபட்ட கோலி-தவான் ஜோடி

2வது டி20 - கோலி, தவான் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா

Published On 2019-09-18 16:51 GMT   |   Update On 2019-09-18 17:10 GMT
விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிய பவுமா களமிறங்கினார். டி காக்குடன் இணைந்து பொறுப்பாக ஆடினார். டி காக் அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். பவுமா 49 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டும் சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார்.

ஷிகர் தவான் 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில், கேப்டன் விராட் கோலி நின்று அதிரடியாக ஆடினார். அவர் 52 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Tags:    

Similar News