செய்திகள்
சாய்னா நேவால்

சீன ஒபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி - முதல் சுற்றிலேயே வெளியேறினார்

Published On 2019-09-18 05:54 GMT   |   Update On 2019-09-18 05:54 GMT
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
சாங்சூ:

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நேற்று தொடங்கியது.

இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

உலக தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ள அவர் 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.

44 நிமிடத்தில் சாய்னா தோல்வியை தழுவினார். தாய்லாந்து வீரர்களிடம் அவர் தோற்றது 2-வது முறையாகும்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா முதல் சுற்றிலேயே வெளியேறியது பரிதாபமே.
Tags:    

Similar News