செய்திகள்
பென் ஸ்டோக்ஸ், ஜாப்ரா ஆர்சர்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்

Published On 2019-09-17 12:44 GMT   |   Update On 2019-09-17 12:44 GMT
ஆஷஸ் தொடரில் அறிமுகமாகி நான்கு போட்டிகளில் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆர்சரால், அடுத்த ஆஷஸ் கோப்பையை வென்று தரமுடியும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 29 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நான்கு போட்டிகளில் விளையாடிய ஆர்சர் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

ஆர்சர் இந்த ஆஷஸ் தொடரை எப்படியும் இங்கிலாந்து அணி கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் டிரா மட்டுமே செய்ய முடிந்தது.

இந்நிலையில் 2021-22-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல உதவிகரமாக இருப்பார் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

ஜாப்ரா ஆர்சர் குறித்து துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘என்னுடைய காலக்கட்டத்தில் ஆர்சரை விட அதிக திறமைப்படைத்த பந்து வீச்சாளரை பார்த்ததாக நினைக்கவில்லை.

எங்களுடைய அணியில் அவர் இருப்பது சிறப்பானது. நாங்கள் 2021-22-ல் ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஆஷஸ் தொடரை கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிக் பாஸ் உள்பட பல்வேறு டி20 லீக்கில் விளையாடி வருகிறார். அது அவருக்கு வசதியாக இருப்பதாக கருதுகிறார். 90 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் கூட, கட்டுப்பாட்டுடன் பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். உலகில் உள்ள எந்த இடத்திலும் அவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்’’ என்றார்.
Tags:    

Similar News