செய்திகள்
டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்

Published On 2019-09-16 04:58 GMT   |   Update On 2019-09-16 04:58 GMT
டிஎன்பிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு மர்ம நபர்கள் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் (டிஎன்பிஎல்) விளையாடிய தமிழக வீரர்கள் சிலருக்கு, மர்ம நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட எண்களில் இருந்து அந்த மெசேஜ் வந்ததால், இதுபற்றி பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வீரர்களுக்கு இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.



இதுபற்றி பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைவர் அஜீத்  சிங் கூறுகையில், “அடையாளம் தெரியாத குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்ததாக சில வீரர்கள் கூறி உள்ளனர். வீரர்கள் கொடுத்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு மெசேஜ் அனுப்பிய நபர்களின் எண்களை வைத்து அவர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.
Tags:    

Similar News