செய்திகள்
முகமது நபி

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்: வங்காளதேசத்தை பந்தாடியது ஆப்கானிஸ்தான்

Published On 2019-09-15 16:31 GMT   |   Update On 2019-09-15 16:31 GMT
டாக்காவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.
வங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் மூன்று வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், அஸ்கர் ஆப்கன் 37 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.

முகமது நபி ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவிக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி சார்பில் முகமது சாய்புதீன் 4 விக்கெட்டும், ஷாகிக் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீச, வங்காளதேச அணியின் தொடக்கம் ஆட்டம் கண்டது.



மெஹ்முதுல்லா 39 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். சபீர் ரஹ்மான் 24 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க வங்காளதேசம் 19.5 ஓவரில் 139 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப் உர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுக்களும் பரீத் அகமது, ரஷித் கான், குல்பதீன் நைப் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News