செய்திகள்
டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங்

வார்னர் இன்னொரு டக்அவுட் ஆனாலும் கவலையில்லை: ரிக்கி பாண்டிங்

Published On 2019-09-15 09:58 GMT   |   Update On 2019-09-15 09:58 GMT
வார்னர் இன்னொரு முறை டக்அவுட் ஆனாலும் ஆஸ்திரேலிய அணியில் அவருக்கான இடத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டேவிட் வார்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை 9 இன்னிங்சில் களம் இறங்கி ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். தொடர்ச்சியாக மூன்று முறை டக்அவுட் ஆகியுள்ளார்.

என்றாலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னருக்கு கட்டாயம் இடம் உண்டு என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரின்போது ஆஸ்திரேலிய அணியில் யார்? யார்? இருப்பார்கள் என்று ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஓவல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் வார்னர் மீண்டும் ஒருமுறை டக்அவுட் ஆனாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஆஸ்திரேலிய அணியில் அவர் இருப்பார்.

இதேபோல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்சாக்னே ஆகியோருக்கும் இடம் கிடைக்கும். மிடில் ஆர்டர் வரிசையில் வடே, டிராவிஸ் ஹெட் ஆகியோரின் இடம் கேள்விக்குறியே’’ என்றார்.
Tags:    

Similar News