செய்திகள்
அரை சதமடித்த நஜிபுல்லா சட்ரான்

முத்தரப்பு தொடர் - நஜிபுல்லா சட்ரான் அதிரடியால் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Published On 2019-09-15 03:29 GMT   |   Update On 2019-09-15 03:29 GMT
டாக்காவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் 2வது ஆட்டத்தில் நஜிபுல்லா சட்ரானின் அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.
டாக்கா:

வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் வங்காள தேசம், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிச்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 முத்தரப்பு தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரஹமத்துல்லாகர்பாஸ் 43 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கடைசியில் விளையாடிய நஜிபுல்லா சட்ரான் 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி ஜிம்பாப்வே முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அந்த அணியில் அதிகபட்சமாக ரெஜிஸ் சகாபா 42 ரன்னும், பிரெண்டன் டெய்லர் 27 ரன்னும், ரியான் பர்ல் 25 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 28 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நஜிபுல்லா சட்ரான் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
Tags:    

Similar News