செய்திகள்
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது
புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-43 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
மும்பை:
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே அரியானா அணி பொறுப்புடன் ஆடியதால் அந்த அணி முதல் பாதியில் 16-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் போராட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் அவர்களின் ஆட்டம் எடுபடவில்லை.
இறுதியில், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 43 -35 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
15-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா ஸ்டீலர்ஸ் அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். 16-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 11-வது தோல்வி இது.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில், குஜராத் பார்ச்சுன் ஜெயண்டஸ் அணியை 43 -33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது புனேரி பால்டன் அணி.