செய்திகள்
மன்சூர் அக்தர்

ஸ்பாட்பிக்சிங் குற்றச்சாட்டு - பாகிஸ்தான் முன்னாள் வீரர் மன்சூர் அக்தரிடம் விசாரணை

Published On 2019-09-14 11:36 GMT   |   Update On 2019-09-14 11:36 GMT
ஸ்பாட்பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு மன்சூர்அக்தரிடம் விசாரணை நடத்தியது.
கராச்சி:

கனடாவில் நடந்த குளேபல் ‘லீக்‘ கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமாஅக்மலை ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் பாகிஸ்தான் முன்னாள் வீரரும், அந்தப் போட்டியில் விளையாடும் ஒரு அணியின் நிர்வாகியுமான மன்சூர் அக்தர் மீது குற்றம்சாட்டி இருந்தார்.

ஸ்பாட்பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு மன்சூர்அக்தரிடம் விசாரணை நடத்தியது. ஸ்டீவ்ரிச்சர்ட்சன் ஸ்டேடியத்துக்கு அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

மன்சூர்அக்தர் 19 டெஸ்ட் மற்றும் 41 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

Tags:    

Similar News