செய்திகள்
அபிப் ஹுசைன்

டி 20 முத்தரப்பு தொடர் - அபிப் ஹுசைன் அதிரடியால் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காள தேசம்

Published On 2019-09-14 10:03 GMT   |   Update On 2019-09-14 10:03 GMT
டாக்காவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் அபிப் ஹுசைன் அதிரடியாக ஆட ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்.
டாக்கா:

வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் வங்காள தேசம், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிச்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 முத்தரப்பு தொடர் நேற்று தொடங்கியது.

இதில் முதல் போட்டியில் வங்காள தேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காள தேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி 18 ஓவராக குறைக்கப்பட்டது.

அதன்படி, ஜிம்பாவே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாமில்டன் மசகாசா 34 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
 
63 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ரியான் பர்ல் மற்றும் டினோடெண்டா முடோம்போஜி ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் ஜோடி சேர்த்தனர்.



இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. ஜிம்பாப்வே வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 6 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து திணறியது.

அடுத்து இறங்கிய மொசடாக் ஹுசைன், அபிப் ஹுசைன் இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
கடைசியில், வங்காள தேசம் அணி 17.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Tags:    

Similar News