செய்திகள்
மிட்செல் மார்ஷ்

லண்டன் ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்களில் ஆல்அவுட்

Published On 2019-09-13 12:02 GMT   |   Update On 2019-09-13 12:02 GMT
லண்டன் ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மிட்செல் மார்ஷ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஜோ பேர்ன்ஸ் (47), ஜோ ரூட் (57) சிறப்பாக ஆடிய போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள்.

ஆனால், பட்லர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் 64 ரன்களுடனும், லீச் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பட்லர் மேலும் 6 ரன்கள் எடுத்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். லீச் 21 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 87.1 ஓவரில் 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ் ஐந்து விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News