செய்திகள்
எம்எஸ் டோனியுடன் சஞ்சய் பாங்கர்

என்னுடைய பணிக்காலத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது: சஞ்சய் பாங்கர்

Published On 2019-09-12 14:24 GMT   |   Update On 2019-09-12 14:24 GMT
என்னுடைய ஐந்து வருட பேட்டிங் பயிற்சியாளர் பணிக்காலத்தில் இந்தியா உலகக்கோப்பையை தவிர்த்து சிறப்பாகவே விளையாடியது என்று சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணி புரிந்தவர் சஞ்சய் பாங்கர். வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அவருக்குப் பதிலாக விக்ரம் ரத்தோர் தற்போது பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் பணிபுரிந்த காலத்தில், இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘2014-ல் இருந்து இந்திய அணி கடந்த வந்த பாதையை நான் திரும்பி பார்க்கிறேன். கடந்த மூன்று வருடமாக தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இருந்துள்ளது. 52 டெஸ்ட் போட்டிகளில் 32-ல் வெற்றி வாகை சூடியுள்ளோம். அதில் 13 வெளிநாட்டு வென்றதாகும். அனைத்து நாடுகளிலும் சீரான ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளோம். உலகக்கோப்பையை மட்டுமே நாம் வெல்லவில்லை.

மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கபடாததால் ஏமாற்றம்தான். ஆனால் வாய்ப்பு தந்ததற்காக பிசிசிஐ, பயிற்சியாளர்கள் டங்கன், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோருக்கு நன்றி சொல்லியாக வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News