செய்திகள்
இந்தியா ஏ அணி

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2019-09-12 12:42 GMT   |   Update On 2019-09-12 12:42 GMT
தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் திருவனந்தபுரத்தில் கடந்த 9-ந்தேதி முதல் இன்று வரை நடைபெற்றது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் இந்திய ‘ஏ’ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 164 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மார்கோ ஜார்சன் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் அடித்தார்.

பின்னர் இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஷுப்மான் கில் 90 ரன்களும், சக்சேனா ஆட்டமிழக்காமல் 61 ரன்களும் சேர்க்க இந்தியா ‘ஏ’ அணி 303 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 186 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News