செய்திகள்
மெக்ராத்

‘பால் டேம்பரிங்’ சம்பவத்தை பின்னுக்குத் தள்ளியது ஆஷஸ் வெற்றி: மெக்ராத்

Published On 2019-09-10 11:47 GMT   |   Update On 2019-09-10 11:47 GMT
ஆஷஸ் கோப்பையை 18 வருடத்திற்குப் பிறகு தக்க வைத்துக் கொண்டது, கடந்த 18 மாத சோதனைகளை மறக்க மிகமிக முக்கியமானது என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் முடிவடைந்துள்ள. இதில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியில் தோல்வியடைந்தாலும் கோப்பையை இழக்காது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.

இதனால் 2001-க்குப் பிறகு ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துள்ளது. கடந்த வருடம் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது, ஆஸ்திரேலியா அணி பால் டேம்பரிங் சம்பவத்தில் ஈடுபட்டு அவமானத்திற்குள்ளானது.

‘‘18 மாதங்கள் கழித்து தற்போது ஆஷஸ் தொடரை தக்க வைத்திருப்பது மிகமிக முக்கியமானது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ‘பால் டேம்பரிங்’ சம்பவத்தை தற்போது பின்னுக்கு தள்ளமுடியும்’’ என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News