செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்: அணிகள் உரிமையாளர் வங்கி உத்தரவாதம் அளிக்க மறுப்பு

Published On 2019-09-10 10:51 GMT   |   Update On 2019-09-10 10:51 GMT
வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் கோரிக்கையை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் அணிகள் நிராகரித்துள்ளன.
ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரிமீயர் லீக் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நான்கு சீசன் முடிந்து அடுத்த வருடம் ஐந்தாவது சீசன் நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் போட்டி தொடங்குவதற்கு முன் 6 மாத தங்களது வங்கி உத்தரவாதத்தை சமர்பிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வலியுறுத்தியது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்ற புகாரை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள் கோரிக்கையை நிராகரித்துள்ளன.

அணிகள் உரிமையாளர்கள் , நான்காவது சீசன் மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு அணிகளுக்கான ஒளிபரப்பு, மீடியா மற்றும் டைட்டில் ரைட்ஸ், ஸ்பான்சர்ஷிப் மற்றும் பல்வேறு வழிகளில் கிடைக்கும் வருமானம் குறித்த வரவு செலவு கணக்கு விவரங்களை இன்னும் அனுப்பி வைக்கவில்லை என்று தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News