செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித், ஹர்மிசன்

ஸ்டீவ் ஸ்மித் என்றாலே ‘பால் டேம்பரிங்’தான் நினைவுக்கு வரும்: இங்கிலாந்து முன்னாள் பந்து வீச்சாளர்

Published On 2019-09-09 10:38 GMT   |   Update On 2019-09-09 10:38 GMT
ஸ்மித் சிறப்பாக விளையாடினாலும் ‘பால் டேம்பரிங்’தான் நினைவுக்கு வரும் என இங்கிலாந்து முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிப்பதுடன் ஆஷஸ் கோப்பை தக்கவைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்மித்துதான். அவர் ஐந்து இன்னிங்சில் 671 ரன்கள் விளாசியுள்ளார்.

என்னதான் சாதனைகள் படைத்தாலும், ஸ்மித் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ‘பால் டேம்பரிங்’தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.

ஸ்மித் குறித்து ஹர்மிசன் கூறுகையில் ‘‘அவரை உங்களால் மன்னிக்க முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. சீட்டிங் பற்றி நீங்கள் அறியப்படும்போது, அதில் ஸ்மித் இருப்பார். அவர் என்னதான் சாதனை செய்தாலும், தென்ஆப்பிரிக்கா தொடரில் நடந்த ‘பால் டேம்பரிங்’தான் ஞாபகத்திற்கு வரும்’’ என்றார்.
Tags:    

Similar News