செய்திகள்
அமோல் முஜும்தார்

அமோல் முஜும்தாரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது தென்ஆப்பிரிக்கா

Published On 2019-09-09 10:10 GMT   |   Update On 2019-09-09 10:10 GMT
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீரரான அமோல் முஜும்தாரை தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீரரான அமோல் முஜும்தாரை தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

கடந்த முறை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக தயார் செய்யப்பட்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி பேட்ஸ்மேன்கள்  திணறினார்கள்.

இந்த முறை சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என தீர்மானித்துள்ளது. இதற்காக இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரரான அமோல் முஜும்தாரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அமோல் முஜும்தார் 171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களுடன் 11167 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.13 ஆகும். 113 ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் 3286 ரன்கள் சேர்த்துள்ளார்.
Tags:    

Similar News