செய்திகள்
ஷிகர் தவான்

இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடியது தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சிறந்த பயிற்சி- தவான்

Published On 2019-09-06 11:40 GMT   |   Update On 2019-09-06 11:40 GMT
தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடியது தென்ஆப்பிரிக்கா தொடருக்கான சிறந்த பயிற்சி என்று தவான் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தொடக்க பேட்ஸ்மேனான தவான் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். பார்ம் இன்றி தவிப்பதால் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு போட்டிகளில் விளையாட வலியுறுத்தப்பட்டார்.

அதனடிப்படையில் 4-வது போட்டியில் களம் இறங்கிய அவர் அரைசதம் அடித்தார். இன்று நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்தார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிராக விளையாடியது சிறந்த பயிற்சி ஆட்டம் என்று தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘நீண்ட நாட்களுக்குப்பின் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இரண்டு அரைசதங்கள் அடித்தது சிறப்பானது. மிகவும் ரசித்து விளையாடினேன். பந்து சரியாக மிடில் பேட்டில் படும்படி விளையாடினேன்.

தென்ஆப்பிரிக்கா தொடர் வருவதற்கு முன் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி ஆட்டம். டெஸ்ட் போட்டியில் நான் விளையாடாததால் போதுமான ஓய்வு கிடைக்கிறது. களத்தில் இறங்கி விளையாடுவதைத் தவிர ஏதும் இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News