செய்திகள்
ஆஸ்திரேலிய வீரருடன் சிறுவன் மேக்ஸ்

குப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண பணம் சேர்த்த 12 வயது சிறுவன்

Published On 2019-09-06 10:35 GMT   |   Update On 2019-09-06 10:35 GMT
குப்பைகளை அள்ளி அதன்மூலம் சேர்த்த பணத்தால் ஆஸ்திரேலிய சிறுவன் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் போட்டியை காண வந்துள்ளான்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மேக்ஸ். இவன் கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளான்.

அப்போது கிரிக்கெட்டில் போட்டியில் மிகவும் பழமையான மற்றும் கடும் போட்டியாக திகழும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் சென்று பார்க்க விரும்பினான்.

தனது ஆசையை அம்மாவிடம் கூறினார். அப்போது அருகில் உள்ள வீடுகளில் வார இறுதியில் குப்பைகளை அள்ளி வெளியில் கொண்டு போட்டால் ஒரு டாலர் சம்பளமாக வாங்கலாம் என தாயார் ஆலோசனை கூறியுள்ளார்.

அதன்படியே மேக்ஸ் வாரந்தோறும் குப்பைகளை அள்ளி பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து ஆஷஸ் தொடரை பார்க்க டிக்கெட் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.

அவரது தந்தை மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற போட்டியை பார்க்க குடும்பத்துடன் வந்து தனது மகன் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணிக்கு தெரிய வர பேட் கம்மின்ஸ், ஸ்மித் ஆகியோர் மேக்ஸை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பேட் கம்மின்ஸ் மேக்ஸ்க்கு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
Tags:    

Similar News