செய்திகள்
சவுரவ் கங்குலி

தொடக்க ஆட்டக்காரராக ராகுலுக்கு பதில் இவரை இறக்க வேண்டும்... -சவுரவ் கங்குலி

Published On 2019-09-06 07:35 GMT   |   Update On 2019-09-06 07:35 GMT
தென் ஆப்பிரிக்காவுடன் நடக்கவுள்ள போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக ராகுலுக்கு பதிலாக மற்றொரு வீரரை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பரிந்துரை செய்துள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்டில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களம் இறங்கினர். 

இதில் லோகேஷ் ராகுல் முதல் டெஸ்டில் முறையே 44 ரன், 38 ரன் எடுத்தார். 2-வது டெஸ்டில் முறையே அவர் 13 ரன், 6 ரன் எடுத்தார். அதேபோல் மயங்க் அகர்வால் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். மற்ற இன்னிங்சில் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதனால் டெஸ்ட் போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தொடக்க வீரர்களை கண்டறிவது அவசியம். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியதாவது:



உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்ததில் சிலவற்றில் முன்னேற்றம் அடைவது அவசியம். சில வீரர்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்க வேண்டும்.

தொடக்க வீரர்கள் வரிசையில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். மயங்க் அகர்வால் நன்றாக விளையாடுவது போல் உள்ளது. அவரது ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு இன்னும் வாய்ப்புகள் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் பேட்டிங் நிலையாக இல்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக இறக்கி முயற்சித்து பார்க்கலாம். இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News