செய்திகள்
சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா

திணறும் கேஎல் ராகுல்: தொடக்க இடத்திற்கு ஹிட்மேன் சரியான நபராக இருப்பார்- கங்குலி

Published On 2019-09-05 12:10 GMT   |   Update On 2019-09-05 12:10 GMT
கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டியில் திணறி வரும் நிலையில், தொடக்க இடத்திற்கு ஹிட்மேன் சரியான நபர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல்,  முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கி விளையாடி வந்தனர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முரளி விஜய், கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதன்பின் மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களம் இறங்க இருந்தனர். பிரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுலுக்கு மீண்டும் தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் விமர்சனம் எழும்பியது. மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தும் கேஎல் ராகுல் மோசமாக விளையாடி வருவதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்க தகுதியானவர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்பது குறித்து கங்குலி கூறுகையில் ‘‘நான் ஏற்கனவே ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தேன். அவர் சிறந்த வீரர் என்பதால் மீண்டும் அந்த ஆலோசனையின் மீது நம்பிக்கை உள்ளது.



உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்திய பின், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என்று நம்பினேன். ரகானே மற்றும் ஹனுமா விஹாரி 5-வது மற்றும் 6-வது இடத்தை கெட்டியாக பிடித்துவிட்டனர். மிடில் ஆர்டர் வரிசையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்ய முடியாது.

தொடக்க இடங்களில் இன்னும் முன்னேற வேண்டிய நிலை உள்ளது. மயாங்க் அகர்வால் ஆட்டம் சிறப்பாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இன்னும் அதிகாமான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது அவசியம். கேஎல் ராகுல் ஏமாற்றம் அளித்து வருகிறார். இதனால் தொடக்கத்தில் வெற்றிடம் உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News