செய்திகள்
ஜார்ஜ் லிண்டே, ஜேஜே ஸ்மட்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென்ஆப்பிரிக்கா அணியில் புதுமுக வீரர்

Published On 2019-09-05 11:19 GMT   |   Update On 2019-09-05 11:19 GMT
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்த ஸ்மட் நீக்கப்பட்டு, தென்ஆப்பிரிக்கா அணியில் புதுமுக வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி நாளை இந்தியா புறப்படுகிறது.

இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஏற்கனவே ஜேஜே ஸ்மட்ஸ் இடம் பிடித்திருந்தார். தற்போது அவர் உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால் புதுமுக சுழற்பந்து வீச்சாளரான ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லிண்டே சிறப்பாக விளையாடியதால் தென்ஆப்பிரிக்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News