செய்திகள்
சிறுவனிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொள்ளும் விராட் கோலி

எனக்கு அவருடைய ஆட்டோகிராப் வேண்டும்.. 7 வயது சிறுவனிடம் பெற்றுக் கொண்ட கோலி...

Published On 2019-09-05 08:43 GMT   |   Update On 2019-09-05 08:43 GMT
ஜமைக்காவில் 7 வயது சிறுவனிடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்டோகிராப் வாங்கிக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடும் திறனை கண்டு நாளுக்கு நாள்  ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரசிகர்களிடம் விராட் கோலி அன்புடன் நடந்தும் வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான மூதாட்டி ஒருவருக்கு, அவர் கேட்ட இலவச  இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை அனுப்பி வைத்தார்.


இப்போது மற்றொரு குட்டி ரசிகரிடம் விராட் கோலி அன்பாக நடந்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘என்னுடைய உறவினரின் 7 வயது மகன், முதல் டெஸ்ட்டின் போது ஜமைக்காவில் இருந்தார். அப்போது விராட் கோலியிடம்,  ‘உங்கள் ஆட்டோகிராப்புக்கு பதிலாக எனது ஆட்டோகிராப் விரும்புகிறீர்களா?’ என கேட்டுள்ளார்.

இதனை கேட்ட விராட் கோலி நின்றார். அவருடன் அனுஷ்கா சர்மாவும் நின்றார். பின்னர் மற்றொருவர் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்ட போது விராட்,  ‘இருங்கள்! எனக்கு இவருடைய ஆட்டோகிராப் வேண்டும்’ என கூறினார்.

ஆட்டோகிராப்பை வாங்கிய பின்னர்,  ‘இதை பாருங்கள்! அழகாக உள்ளது’ என இந்திய அணியின் கேப்டன் கூறினார். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, இந்த வீடியோ முழுவதும் சிரிப்புடனே இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News