செய்திகள்
செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ்

Published On 2019-09-04 09:38 GMT   |   Update On 2019-09-04 09:38 GMT
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால்இறுதியில் 18-வது வரிசையில் உள்ள சீன வீராங்கனை வாங்-ஐ எதிர் கொண்டார்.

8-வது வரிசையில் இருக்கும் செரீனாவின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு வாங்-கால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. ஒரு செட்டை மட்டுமே கைப்பற்றினார். இதனால் செரீனா 6-1, 6-0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபன் டென்னிசில் செரீனாவின் 100-வது வெற்றி இதுவாகும்.

செரீனா வில்லியம்ஸ் அரை இறுதியில் 5-வது இடத்தில் உள்ள எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் கால் இறுதியில் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 16-வது இடத்தில் உள்ள ஜோகன்னா கோன்ட்டாவை (இங்கிலாந்து) வீழ்த்தினார்.

இன்று நடைபெறும் ஆண்களுக்கான ஒற்றையர்பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து) - டோனா வெகிக் (குரோஷியா), பினாக்கா (கனடா) - மெர்டன்ஸ் (பெல்ஜியம்) மோதுகிறார்கள்.

உலகின் 3ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) கால்இறுதியில் 78-வது இடத்தில் உள்ள டிமிட்ரோவை (பல்கேரியா) எதிர் கொண்டார். அமெரிக்க ஓபன் பட் டத்தை 5 முறை வென்ற பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் கடும் போராட்டத்துக்கு பிறகு தோல்வியை தழுவி வெளியேறினார்.
Tags:    

Similar News