செய்திகள்
அரை சதமடித்த கிராண்ட்ஹோம், டாம் புரூஸ்

கிராண்ட்ஹோம், டாம் புரூஸ் அதிரடி - இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

Published On 2019-09-03 17:10 GMT   |   Update On 2019-09-03 17:10 GMT
கிராண்ட்ஹோம் மற்றும் டாம் புரூஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
கொழும்பு:

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-1 என சமனில் முடிந்தது.

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. பல்லேகலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணிவெற்றி பெற்றது. 

இந்நிலையில், இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிரோஷன் டிக்வெலா 39 ரன்னும், அவிஷ்கா பெர்னாண்டோ 37 ரன்னும் குசால் மெண்டிஸ் 26 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தனர்.
 
நியூசிலாந்து அணி சார்பில் சேத் ரான்ஸ் 3 விக்கெட்டும், டிம் சவுத்தி, குஜ்ஜலிஜின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய காலின் டி கிராண்ட்ஹோம், டாம் புரூஸ் ஆகியோர் பொறுப்புடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்து அவுட்டாகினர்.
கடைசியில் சில விக்கெட்டுக்கள் வீழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதியில், நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Tags:    

Similar News